செய்திகள்

மாணவியை கடத்திய வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான 5 பேர் சேலம் சிறையில் அடைப்பு

Published On 2019-01-26 12:19 GMT   |   Update On 2019-01-26 12:19 GMT
ஊத்தங்கரையில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை கடத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் கைதான 5 பேரை போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 படிக்கும் மாணவியை கடத்திய குற்றத்திற்காக 5 பேரை ஊத்தங்கரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் நத்தம் கோடியூர் பகுதியை சேர்ந்த திம்மையன் மகன் சிலம்பரசன் (23). அவரது நண்பர்களான ஓசூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (44), ஆனந்த் (41), சம்பத்குமார் (23), பிரேம்குமார் (36), ஆகிய 5 பேரும் பெங்களூருவில் பேனர் தயாரிக்கும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

சிலம்பரசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கடந்த புதன்கிழமை இரவு பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பிய மாணவியை கடத்தி சென்று ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து பெண்ணின் தாய் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்,இது குறித்து ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டி தலைமையிலான போலீசார் மாணவியை கடத்தியவர்களை பிடித்து, அவர்கள் 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
Tags:    

Similar News