செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 6,861 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

Published On 2019-01-25 10:24 GMT   |   Update On 2019-01-25 10:24 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 6,861 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #JactoGeo

திருவள்ளூர்:

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைக்குள் அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1322 பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களில் பணிக்குவராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடக்கக் பள்ளி ஆசிரியர்கள் 4328 பேருக்கும் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் 2533 பேருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். இதே போல் மாவட்டம் முழுவதும்அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்த விவரத்தை மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

இன்று முதல் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வும் நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

ஜாக்டோ - ஜியோ சார்பில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று 4-வது நாளாக திருவள்ளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் கதிரவன், சவுத்ரி, இளங்கோவன், ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News