செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-01-20 16:07 IST   |   Update On 2019-01-20 16:07:00 IST
ஊத்துக்கோட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தை சேர்ந்தவர் கிஷ்டாரெட்டி. இவரது மகள் ருத்ராதேவி (வயது 23). இவருக்கும் சென்னை நந்தனத்தை சேர்ந்த அய்யப்பன் (34) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 21-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தலை பொங்கல் கொண்டாட ருத்ராதேவி கணவனுடன் சூளைமேனியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது.

அய்யப்பன் மனைவியை திட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார். இதனால் மனம்உடைந்த ருத்ராதேவி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News