செய்திகள்
திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கார் டிரைவர் பலி
திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் கார் டிரைவர் பலியானார்.
திருச்செந்தூர்:
குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் குமரேசன் (வயது 24). கார் டிரைவர். நேற்று இரவு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருச் செந்தூர் அடுத்த ஆழந்தலை அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே குமரேசன் பலியானார். இது குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.