செய்திகள்

பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2019-01-07 14:12 GMT   |   Update On 2019-01-07 14:12 GMT
பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #ChennaiSpecialCourt #BalakrishnaReddy #Stalin
சென்னை:

கடந்த 1998-ல் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றது அப்போது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிமீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும்,தமிழக அமைச்ச்சர் பால்கிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.



இந்நிலையில், பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவையில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டியை உடனடியாக நீக்க வேண்டும். தகுதி இழந்த ஒருவர் இனி அமைச்சரவையில் தொடரக் கூடாது. 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பாலகிருஷ்ணா ரெட்டியை காலதாமதமின்றி நீக்க வேண்டும்

மேலும், உயர் நீதிமன்றமே கைதுசெய்ய உத்தரவிட்ட பிறகும் உயர் கல்வித்துறைச் செயலாளரை அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, உயர் கல்வித்துறை செயலர் பொறுப்பில் இருந்து மங்கத்ராம் சர்மாவை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். #ChennaiSpecialCourt #BalakrishnaReddy #Stalin
Tags:    

Similar News