செய்திகள்

வேடசந்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல்

Published On 2019-01-02 18:25 GMT   |   Update On 2019-01-02 18:25 GMT
வேடசந்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பாக லாரி பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.
வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகேயுள்ள நல்லமனார்கோட்டை, கோட்டைமந்தை உள்ளிட்ட பகுதிகளில் வரட்டாற்றில் மர்ம கும்பல் அனுமதியின்றி மணல் அள்ளி செல்கிறது. மேலும் மணல் அள்ளுவதை தடுக்க முயற்சிக்கும் விவசாயிகளை அந்த கும்பல் மிரட்டுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மணல் அள்ளும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டைமந்தை முனியப்பன் கோவில் அருகே ஒரு மினிலாரி மணல் ஏற்றி கொண்டு வந்தது. ஆனால், போலீசார் வருவதை கண்டதும் மினிலாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மினிலாரியை ஓட்டி வந்தது சொட்டமாயனூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பது தெரியவந்தது. எனவே, அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News