செய்திகள்

இந்தோனேசியாவிற்கு உதவும் பிரதமர் தமிழ்நாட்டு மக்களை கண்டு கொள்வதில்லை- சீமான் பேட்டி

Published On 2018-12-29 17:44 IST   |   Update On 2018-12-29 17:44:00 IST
நம் நாட்டின் பிரதமர் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாதிப்புக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன் என கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டு மக்களை கண்டு கொள்வதில்லை என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார். #seeman #gajacyclone #pmmodi
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் புயலால் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக 500 தென்னை மரக்கன்றுகள் மற்றும் 200 கிலோ அரிசி வழங்கினார். பின்னர் தென்னங்கன்றினையும் நட்டு வைத்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய சீமான் கூறுகையில்,

தமிழ்நாட்டில் கஜா புயலால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை மத்திய- மாநில அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. கஜா புயலுக்கு ஒதுக்கிய ரூ.350 கோடி நிதி எங்கே போனது என்று தெரியவில்லை.


அதனைக் கண்டித்து நாகையில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். நம் நாட்டின் பிரதமர் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாதிப்புக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன் என கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் புயலால் பாதித்துள்ள நிலையில் அவர்களை கண்டுகொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #seeman #gajacyclone #pmmodi
Tags:    

Similar News