செய்திகள்

வாடிப்பட்டி அருகே மனைவியை கொன்று வியாபாரி தற்கொலை

Published On 2018-12-25 16:57 IST   |   Update On 2018-12-25 16:57:00 IST
மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது மனைவி பாலாமணி (37). இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், வீரகுரு என்ற மகனும் உள்ளனர்.

வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முருகன் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை அவருக்கும் மனைவி பாலாமணிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முருகன், மனைவியை தாக்கினார். இதிலும் கோபம் தணியாத அவர், அங்கு கிடந்த கல்லை எடுத்து பாலாமணி தலையில் போட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலாமணி இறந்தார். இதனால் முருகன் அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததை நினைத்து வேதனை அடைந்தார்.

மேலும் போலீசுக்கு பயந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முருகன்- பாலாமணி உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags:    

Similar News