செய்திகள்

பிளாஸ்டிக் பைகளை தடை செய்யும் அரசாணைக்கு தடை இல்லை- சென்னை உயர்நீதிமன்றம்

Published On 2018-12-18 05:54 GMT   |   Update On 2018-12-18 05:54 GMT
தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. #PlasticBan #TN
சென்னை:

தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இது சம்பந்தமான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பை, கப், பேப்பர், ஸ்டிரா, பிளாஸ்டிக் இலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



இந்நிலையில், பிளாஸ்டிக் தடை ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உடனடியாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் தடை விதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இக்கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PlasticBan #TN
Tags:    

Similar News