செய்திகள்

சங்கரன்கோவில் அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-12-12 14:23 GMT   |   Update On 2018-12-12 14:23 GMT
சங்கரன்கோவில் அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.
சங்கரன்கோவில்:

பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி செய்து வருபவர் அமர்நாத்ஜோதி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 கிராம் தங்க நகைகள் மற்றும் கம்மல்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் பனவடலிசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் ஏட்டு வீட்டிலேயே திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்நிலையில் அமர்நாத்ஜோதியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சில வாலிபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது நடவடிக்கையை கண்காணித்த போது நகைகள் திருடு போனதில் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பனவடலிசத்திரத்தை சேர்ந்த கார்த்திக் (23), தெற்குபனவடலியை சேர்ந்த தவசு (28), கமலேஷ் ஆகியோரை தேடி வந்தனர். 

இதில் கார்த்திக், தவசுவை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய கமலேசை தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News