செய்திகள்

நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு

Published On 2018-12-12 06:22 GMT   |   Update On 2018-12-12 06:22 GMT
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு உடனே நிதி ஒதுக்க கோரி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து வலியுறுத்தினார்கள். #GajaCyclone #ArunJaitley #ADMKMPs
சென்னை:

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பேர் வீடுகளை இழந்ததுடன், லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை, பலா மரங்களும் சாய்ந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நாசமானது.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழக அரசும் ரூ.1000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளது.


ஆனால் சேத மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்பதால் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய குழுவினரும் நேரில் வந்து பார்வையிட்டு சேத விவரங்களை அறிந்து சென்றனர். ஆனால் இன்னும் மத்திய அரசு நிதி ஒதுக்காமல் உள்ளது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட இன்னும் ஒதுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை இன்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணத்துக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். #GajaCyclone #ArunJaitley #ADMKMPs
Tags:    

Similar News