செய்திகள்

திமுக ஆதரவில் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்பி ஆவாரா?: சோனியா காந்தி முயற்சி

Published On 2018-12-09 09:37 GMT   |   Update On 2018-12-09 09:37 GMT
மன்மோகன் சிங்கை திமுக ஆதரோவடு தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களை எம்பி-யாக தேர்வு செய்வதற்கு சோனியா காந்தி முயற்சி செய்து வருகிறார். #DMK #SoniaGandhi
சென்னை:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமராக 10 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் மன்மோகன் சிங். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் அவர் பிரதமராக இருந்துள்ளார்.

தற்போது மன்மோகன்சிங் மாநிலங்களவை எம்பி-யாக உள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸ் சார்பில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் 14-ந்தேதியுடன் முடிகிறது. அசாமில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி அந்த மாதமே காலியாகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்எல்ஏ-க்களே உள்ளனர்.

இதனால் மன்மோகன் சிங் மீண்டும் அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து மன்மோகன் சிங்கை மாநிலங்களவை எம்பி-யாக தேர்வு செய்வதற்கு சோனியா காந்தி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 97 எம்எல்ஏக்- கள் உள்ளனர். திமுகவு-க்கு 88 பேரும், காங்கிரசுக்கு 8 பேரும் உள்ளனர். முஸ்லிம் லீக் சார்பில் ஒரு எம்எல்ஏ உள்ளார்.



தற்போதைய சூழலில் 20 தொகுதிகள் காலியாக இருப்பதாலும், அதிமுக-வில் தினகரனை பலர் ஆதரிக்கும் நிலை உள்ளதாலும் திமுக-வுக்கு 3 எம்பி-க்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. எனவே இதனை பயன்படுத்தி மன்மோகன் சிங்கை மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தில் இருந்து தேர்வு செய்து விட வேண்டும் என்பதில் சோனியாகாந்தி தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோரிடம் சோனியா காந்தி பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அசாமில் இருந்தே மன்மோகன் சிங் எம்பி-யாக தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News