செய்திகள்

கரூர் அமராவதி ஆற்றில் பிணமாக மிதந்த திருநங்கை- கொலையா? போலீசார் விசாரணை

Published On 2018-12-08 17:02 GMT   |   Update On 2018-12-08 17:02 GMT
கரூர் அமராவதி ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை பிணமாக மிதந்தார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர்:

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெரு அருகே அமராவதி ஆற்றின் அருகே பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது ஆற்றின் நடுபகுதியில் முட்புதரில் சிக்கிய நிலையில் பிணம் ஒன்று மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே இது குறித்து கரூர் டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாணை மேற்கொண்டனர். இதில் பிணமாக கிடந்தவர் 45 வயது மதிக்க திருநங்கை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை மர்ம நபர்களை கொலை செய்து ஆற்றில் வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என உடனே தெரியவில்லை. கரூர் பகுதியில் உள்ள திருநங்கைகள் சங்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் இந்த ஊர் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஈரோடு, நாமக்கல் போன்ற பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் உடலில் எந்த காயமும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மர்ம மரணமாக குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News