செய்திகள்

கஜா புயல் பாதிப்பு - இந்திய கம்யூனிஸ்டு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

Published On 2018-12-08 14:50 GMT   |   Update On 2018-12-08 14:50 GMT
கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியது. GajaCyclone #GajaCycloneRelief #CPI
சென்னை:
    
தமிழகத்தில் கடந்த மாதம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இதுதொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார். #GajaCyclone #GajaCycloneRelief #CPI
Tags:    

Similar News