செய்திகள்

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.18, 19, 20 ஆம் தேதிகளில் நடைபெறும் - அண்ணா பல்கலை

Published On 2018-12-08 19:01 IST   |   Update On 2018-12-08 19:01:00 IST
கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19, 20ஆம் தேதிகளில் நடைபெறும் என பதிவாளர் அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
சென்னை:

கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்கிடையே, கஜா புயல் பாதிப்பால் அந்த மாவட்டங்களில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், புயல் பாதிப்பு காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 18, 19, 20-ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
Tags:    

Similar News