செய்திகள்

புழலில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி மதுப்பிரியர்கள் முற்றுகை

Published On 2018-12-08 10:27 GMT   |   Update On 2018-12-08 10:27 GMT
புழலில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி 50-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் முற்றுகையிட வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்குன்றம்:

புழல் காவல் நிலையம் எதிரே தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை புதிதாக கடந்த புதன்கிழமை இரவு திறக்கப்பட்டது. இந்த கடையை இப்பகுதியில் திறக்க கூடாது என கூறி நேற்று முன்தினம் பகலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் நேற்றும் கடையை திறக்கக்கூடாது என பொதுமக்கள் முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்தநிலையில் 50க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் புழல் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை இல்லை. எனவே நாங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் சென்று வினாயகபுரத்தில் மது குடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்குவது மட்டுமல்லாமல் விபத்துகளிலும் சிக்கிக் கொள்கிறோம்.

எனவே புழலில் மதுக்கடையை திறக்கவேண்டும் என வலியுறுத்தி மதுபிரியர்கள் முற்றுகையிட வந்தனர். இவர்களை புழல் இன்ஸ் பெக்டர் நடராஜ் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புழல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News