செய்திகள்

கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி மாணவி பலி

Published On 2018-12-06 15:27 IST   |   Update On 2018-12-06 15:27:00 IST
கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். #Accident
சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் ஓமன் மேத்யூ. இவரது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (12).

இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை 7.30 மணி அளவில் தனது சித்தப்பாவுடன் ஜெமீமா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் ஜெமீமா தவறி கீழே விழுந்து லாரியின் அடியில் சிக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பள்ளி சென்ற மாணவி சீருடையுடன் விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. #Accident

Tags:    

Similar News