செய்திகள்

மாதவரம்-கும்மிடிப்பூண்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

Published On 2018-12-03 06:54 GMT   |   Update On 2018-12-03 06:54 GMT
மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.
மாதவரம்:

மாதவரம் பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து வருகின்றன. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மாதவரம் புதிய பஸ்நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த வடிவேலு, தனசேகர் என்பதும், இருவரும் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவர் மீதும் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கைதானவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வேற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அலமேலு. இவர் கடந்த மாதம் 13-ந்தேதி வீட்டு வாசலின் அருகே பால் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அலமேலுவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கசங்கிலியை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இது தொடர்பாக கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், சதிஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News