செய்திகள்

மிளகாய் பொடி தூவி கொள்ளை- நகைக்கடையில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது

Published On 2018-11-29 09:51 GMT   |   Update On 2018-11-29 09:51 GMT
திருவொற்றியூர் நகை கடையில் 6 பவுன் மதிப்புள்ள 3 தங்க செயின்களை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரில் பந்தாராம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த மாதம் 30-ந்தேதி வந்த மர்ம ஆசாமி கடை உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் மதிப்புள்ள 3 தங்க செயின்களை கொள்ளையடித்து சென்றான்.

அவன் வந்த மோட்டார் சைக்கிள் கடையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் இருந்த ஆவணங்களை வைத்து கொள்ளையன் சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 40) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் பதுங்கி இருந்த சந்துருவை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News