செய்திகள்

ஆலங்குளம் அருகே மினி லாரியுடன் வாலிபர் மாயம்

Published On 2018-11-28 22:25 IST   |   Update On 2018-11-28 22:25:00 IST
ஆலங்குளம் அருகே மினி லாரியுடன் வாலிபர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.
நெல்லை:

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தமிழ்செல்வம் (வயது29). இவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அனந்த நாடார்பட்டி கிராமத்தில் உள்ள மெத்தை தயாரிப்பு நிறுவனத் தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

கடந்த 24-ந்தேதி இந்த கம்பெனியில் இருந்து தமிழ் செல்வம் மினி லாரியில் மெத்தை லோடுகளை ஏற்றி கொண்டு அருப்புக்கோட்டைக்கு சென்றார். அங்கு மெத்தைகளை இறக்கி விட்டு மறுநாள் அனந்த நாடார் பட்டிக்கு வரவேண்டும். ஆனால் தமிழ்செல்வம் வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. 

அவரை பற்றிய தகவல்கள் கிடைக்காததால் கம்பெனி மேலாளர் ஆலங்குளத்தை சேர்ந்த எட்வர்ட், பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி மற்றும் மெத்தையுடன் தலைமறைவான தமிழ் செல்வத்தை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News