செய்திகள்

சவுகார்பேட்டை தங்க பட்டறை ஊழியரிடம் 52 பவுன் நகை அபேஸ்

Published On 2018-11-20 10:27 GMT   |   Update On 2018-11-20 10:27 GMT
சவுகார்பேட்டை தங்க பட்டறை ஊழியரிடம் 52 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

சவுகார்பேட்டையில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்திருப்பவர் ‌ஷரிபுல் ஹக்.

இங்கு நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்ப்பவர் ஷாகில் (18). இவர் இங்கு செய்த 52 பவுன் நகைகளை பாலீஸ் போடுவதற்காக வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒரு பட்டறைக்கு கொண்டு சென்றார்.

வழியில் 2 பேர் இவரை சந்தித்தனர். பட்டறை அதிபருக்கு நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டனர். வியாபாரம் சிறப்பாக நடக்க நகைகளுக்கு பூஜை நடத்துவதாக கூறினார்கள்.

இதை உண்மை என்று நம்பிய ஷாகில் தான் கொண்டு சென்ற நகைகளுக்கு பூஜை நடத்த ஒப்புக்கொண்டார். அருகில் உள்ள ஒரு இடத்தில் நகைகளை வைத்து பூஜை செய்தனர். கண்களை மூடி தியானம் செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

ஒருவர் மந்திரம் சொன்னார். இந்த நிலையில் திடீரென்று அவர்கள் 52 பவுன் தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து யானை கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்களை பிடிக்க பூக்கடை போலீஸ் உதவி கமி‌ஷனர் லட்சுமணன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

யானைக்கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதன்மூலம் நகைகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News