செய்திகள்

பழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-11-14 08:30 GMT   |   Update On 2018-11-14 08:30 GMT
தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PazhaNedumaran #MadrasHC
சென்னை:

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கில் இருந்து, 2006ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.



இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், பழ நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ள புத்தகங்களை திரும்ப வழங்க மறுத்ததோடு, அந்த புத்தகங்களை சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். #PazhaNedumaran #MadrasHC
Tags:    

Similar News