செய்திகள்

மனித நேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர் தொகுதியை ஒதுக்கவேண்டும்- நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு

Published On 2018-11-12 15:30 IST   |   Update On 2018-11-12 15:30:00 IST
மனித நேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர் தொகுதியை ஒதுக்குமாறு நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை:

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அயராது பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

கடந்த 2016 சட்டமன்றத்தேர்தலின் போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட ஆம்பூர் தொகுதியை ம.ம.க.விற்கு ஒதுக்குமாறு தி.மு.க. தலைமையை கேட்டுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News