செய்திகள்

மதுரை மத்திய சிறையில் அதிரடி சோதனை - செல்போன்கள் பறிமுதல்

Published On 2018-11-11 13:05 IST   |   Update On 2018-11-11 13:05:00 IST
மத்திய சிறையில் நடந்த அதிரடி சோதனையில், 2 செல்போன்கள் சிக்கின. இது தொடர்பாக 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Maduraicentraljail
மதுரை:

தமிழகம் முழுவதும் சிறைகளில் அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கைதிகளிடம் புகையிலை பொருட்கள், செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதை தடுக்கும் வகையில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பல்வேறு சிறைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறையில் இன்று உதவி ஜெயில் அதிகாரி இளங்கோ தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அனைத்து அறைகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது ஒரு அறையில் கழிவறைக்குள் 2 செல்போன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனுடன் 2 சிம்கார்டுகள், ஒரு சார்ஜர் கைப்பற்றப்பட்டன. இவற்றை பதுக்கியதாக சிறை கைதிகள் பார்த்திபன், அழகிரி, கட்டைபிரபு ஆகிய 3 பேர் மீது புகார் கூறப்பட்டது. கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Maduraicentraljail

Tags:    

Similar News