செய்திகள்

கோவையில் டெங்கு -பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலி

Published On 2018-11-07 10:30 GMT   |   Update On 2018-11-07 10:30 GMT
கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களில் காய்ச்சலுக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். #Denguefever #Swineflu
கோவை:

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (32). இவர் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இவரது சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கதிர்வேல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிர் இழந்தார்.

சேலத்தை சேர்ந்தவர் ராஜ் குமார் (39). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றி, வைரஸ் காய்ச்சலுக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். #Denguefever #Swineflu
Tags:    

Similar News