செய்திகள்

திருமங்கலம் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் மாணவ-மாணவிகள் காயம்

Published On 2018-11-02 17:22 GMT   |   Update On 2018-11-02 17:22 GMT
திருமங்கலம் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அந்தப்பகுதி மக்கள் காயமடைந்தனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.

அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த மலை தேனீக்களின் கூடு கலைந்தது. இதனால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் படை எடுத்து வந்து மாணவ, மாணவிகள் மற்றும் அந்தப்பகுதி மக்களை கொட்டியது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 20-க்கும் மேற்பட்டேர் காயமடைந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மீனாட்சி (வயது 80) என்பவரை தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்தார். அவரை அந்தப்பகுதியினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் வேல்மணி என்ற பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தேனீக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News