செய்திகள்
நாமக்கல் கலெக்டர்

நாமக்கலில் சீராக தண்ணீர் வினியோகம் செய்யக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Published On 2018-10-30 17:07 GMT   |   Update On 2018-10-30 17:07 GMT
சீரான முறையில் தண்ணீர் வழங்கக் கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.
நாமக்கல்:

சீரான முறையில் தண்ணீர் வழங்கக்கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்லை அடுத்த, வீசாணம் ஊராட்சியில், 700 குடியிருப்புகள் உள்ளன. வீசாணம், கடக்கால் புதூர், ஒட்டக் குளம்புதூர், ஆதிதிராவிடர் தெரு, கிழக்குச்சாலை, தேவேந்திர குலதெரு, அருந்ததியர் தெரு, மேற்குத்தோட்டம், பால கருப்பணார் தெரு, வீனஸ் காலனி, சிவாஜி நகர், ஜெ.ஜெ.நகர், திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், 3,500 பேர் வசிக்கின்றனர்.

இந்நிலையில் இரண்டு மாதங்க ளுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒரு முறை குடும்பத்திற்கு, 10 குடம் தண்ணீர் வந்தது. தற்போது ஒரு மாதமாக தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதியினர், நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். ஆனால், மேற்கு தோட்டம், பாலகருப்பணார் நகர், ஜெ.ஜெ.,நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, திருவள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த, மூன்றாண்டுகளாக தண்ணீர் வருவது இல்லை. தங்குதடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News