செய்திகள்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2018-10-30 13:58 GMT   |   Update On 2018-10-30 13:58 GMT
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் தலைமையில் மாவட்ட பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #BSNLemployees
சேலம்:

பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதிய பங்களிப்பை முறைப்படுத்த வேண்டும். 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்-க்கு 4-ஜி அலைக்கற்றை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் தலைமையில் மாவட்ட பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் கூறியதாவது:-

அடுத்த மாதம் 14-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படுகிறது. 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக ஊழியர்களை திரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பி.எஸ்.என்.எல். கோபுரங்களில் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்தில் மாநில உதவி தலைவர் வெங்கட் ராமன், நிர்வாகி காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BSNLemployees
Tags:    

Similar News