செய்திகள்

காகிதப்பைகள் தயாரிக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் - வருவாய் அதிகாரி வழங்கினார்

Published On 2018-10-28 17:04 GMT   |   Update On 2018-10-28 17:04 GMT
பெரம்பலூரில் காகிதப்பைகள் தயாரிக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கு வருவாய் அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் மதன கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் காகிதப்பைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி 2 வாரங்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற 34 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது.

பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாற்று வழி முறையான காகிதப்பைகளை வியாபாரிகள் அதிகளவு பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் காகிதப்பை தயாரிப்பை அனைவரும் ஊக்கப்படுத்திட முன்வர வேண்டும் என்று கூறினார். இதில் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News