செய்திகள்

திருச்செங்கோட்டில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2018-10-27 11:56 GMT   |   Update On 2018-10-27 11:56 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல தொழிற்சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு:

பண்டிகை முன்பணம் உடனடியாக வழங்கிட வேண்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும், கடந்த 4-ந் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டதை திரும்ப பெறவேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பணப்பலன் நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்து தொழிற் சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடபட்டனர்.

பணியாளர் சம்மேளன பொது செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி தீனதயாள், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் குணசேகரன், ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலசங்க மாநில நிர்வாகி சந்திரசேகரன், மாவட்ட நிர்வாகி சபாபதி பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் ரவி மருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பணிமனைக்குள் இருந்த போக்குவரத்துகழக தொழிலாளர்களை போலீசார் மற்றும் போக்குவரத்து நிர்வாகம் வெளியேற சொன்னதாலும் வெளியில் இருந்து வந்த தொழிலாளர்களை பணிமனைக்குள் அனுமதிக்காததாலும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பணியாளர் சம்மேளன பொது செயலாளர் மனோகரன் கூறியதாவது:-

எங்கள் கோரிக்கைகளுக்கு உரிய பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய தீர்வு காண வேண்டும் எங்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் அரசு நடந்து கொள்கிறது. வேலை நிறுத்தத்திற்கு எங்களை தூண்டாமல் சுமூக தீர்வு காண வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு செல்லும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகாமல் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத தீபாவளி அமைய உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News