செய்திகள்

கவர்னர் மாளிகைக்குள் பிளாஸ்டிக் பைகள் கொண்டுசெல்ல தடை

Published On 2018-10-25 21:19 GMT   |   Update On 2018-10-25 21:19 GMT
கவர்னர் மாளிகைக்குள் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. #PlasticBagBan #Governor #BanwarilalPurohit
சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பார்வையாளர்களுக்காக புகைப்பட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திறந்துவைத்து, அங்கு இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து, கவர்னர் மாளிகை வளாகத்தை பிளாஸ்டிக் பைகள் இல்லா வளாகமாக மாற்றும் நோக்கத்தில் ‘பிளாஸ்டிக்கை தவிர்த்து புற்றுநோயை தடுப்போம்’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை கவர்னர் வெளியிட்டார். கவர்னர் மாளிகையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு துணிப்பை மற்றும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது.

கவர்னர் மாளிகைக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் பைகள் கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கவர்னர் மாளிகையில் உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் 79 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை கவர்னர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News