செய்திகள்

அதிகாரிகளை தடுத்ததாக சமூக ஆர்வலர்கள் கைது- போலீசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Published On 2018-10-24 16:56 IST   |   Update On 2018-10-24 16:56:00 IST
சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்தும், சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கண்டித்தும் இன்று தி.மு.க.வினர் சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தாம்பரம்:

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் கால்வாய் பணி நடந்து வருகிறது. இதில் டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். அதில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இருந்தார்.

இதையடுத்து சமூக ஆர்வலர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்தும், சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கண்டித்தும் இன்று தி.மு.க.வினர் சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதற்கு புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்தையும், போலீசையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் தேவேந்திரன், லோகநாதன், அமுதா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News