செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்- வானிலை மையம்

Published On 2018-10-18 08:01 GMT   |   Update On 2018-10-18 08:01 GMT
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon #TNRains
சென்னை:

தமிழகம் மற்றும் புதுவைக்கான மழை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது:-

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



வரும் 20ம் தேதியுட்ன் தெற்மேற்கு பருவமழை முடிகிறது. அதே 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமாக சூழ்நிலை உருவாகும். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார். #NortheastMonsoon #TNRains
Tags:    

Similar News