செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2018-10-17 14:13 IST   |   Update On 2018-10-17 14:13:00 IST
ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:

ஆயுத பூஜை நாளை கொண்டாட உள்ளதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

வரத்து அதிகரித்தபோதும் தேவை கூடுதலாக உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.700, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.300, செண்டுமல்லி ரூ.120, காக்கரட்டான் ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.400, துளசி ரூ.50 என்ற விலையில் விற்பனையானது.

குறிப்பாக மல்லிகை, சம்பங்கி, துளசி தேவை அதிகரித்துள்ளது. இதற்காக திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு 10 டன் சம்பங்கி வந்து இறங்கி உள்ளது. நாளை கோவில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூ மாலை கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News