செய்திகள்
வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்

ரெயில்வே சுரங்க பாதையை திறக்ககோரி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

Published On 2018-10-16 11:50 GMT   |   Update On 2018-10-16 11:50 GMT
ரெயில்வே சுரங்கப்பாதையை உடனே திறக்கக்கோரி இன்று வகுப்புகளை புறக்கணித்து ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

கோவை இருகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை தாண்டி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதனால் அங்கு சுரங்க நடைபாதை கட்டப்பட்டது. ஆனால் கட்டி பல மாதங்கள் ஆன பிறகும் அந்த சுரங்கப்பாதை இன்னும் திறக்கப்படவில்லை.

எனவே பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் ரெயில்வே சுரங்கப்பாதையை உடனே திறக்கக்கோரி இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவலறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு வந்து சுரங்கப்பாதையை உடனே திறக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவ, மாணவிகள் கூறினர். #tamilnews
Tags:    

Similar News