செய்திகள்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கோவில் விழாவில் இரு தரப்பினர் மோதல்- 3 பேர் கைது

Published On 2018-10-15 16:28 GMT   |   Update On 2018-10-15 16:28 GMT
ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்ப நகரில் சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் இரு தரப்பினர் மோதினர். இந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்ப நகரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் விழாவிற்காக ஒலி பெருக்கி கட்டி பக்தி பாடல்கள் போட்டுள்ளனர். அப்போது ஒலி பெருக்கியின் சத்தத்தினை குறைக்குமாறு அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது29) கோவிலில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (52) என்பவருக்கும் சுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் சுப்பிரமணிக்கு ஆதரவாக ராஜ்குமார் (28) மற்றும் பெரியசாமிக்கு ஆதரவாக அவரது மகன் சிவராஜ் (20), ரெங்கராஜ் மகன் பார்த்தசாரதி (26) ஆகியோர் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர். 

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் சுப்பிரமணி, பெரியசாமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

அதன் பேரில் போலீசார் மோதலில் ஈடுபட்ட பார்த்தசாரதி, சிவராஜ், ராஜ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் பெரியசாமி, சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News