செய்திகள்

போலீஸ் நிலையத்தில் புகார் செய்து திரும்பிய வியாபாரி மரணம்- கோவில் தர்மகர்த்தா கைது

Published On 2018-10-15 09:10 GMT   |   Update On 2018-10-15 09:10 GMT
வாடகை பணம் கேட்டு மிரட்டியதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்த திரும்பிய வியாபாரி மரணமடைந்ததை தொடர்ந்து கோவில் தர்மகர்த்தாவை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள யதோகதகாரி கோவிலுக்கு சொந்தமான இடம் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ளது. இதில் ஏராளமானோர் கடை வைத்து உள்ளனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் (43) என்பவர் கடை வைத்து இருந்தார். அவர் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே கோவில் தர்மகர்த்தா நாராயணன் என்பவர் வாடகை பாக்கி வைத்திருந்த வியாபாரிகளை கடைகளை காலி செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ரகுநாதன் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “நான் வாடகை பாக்கி வைத்திருந்ததால் கோவில் தர்ம கர்த்தா நாராயணன் மற்றும் காஞ்சீபுரம் ரவுடி தியாகுவின் தாய் பவானி ஆகியோர் கடைக்கு வந்து என்னை மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பிய ரகுநாதனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரகுநாதனின் மனைவி தேவி சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் கோவில் தர்மகர்த்தா நாராயணனை 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News