செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு

Published On 2018-10-14 09:40 GMT   |   Update On 2018-10-14 09:57 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

சென்னை:

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் வீழ்ச்சி அடைந்திருந்த காய்கறிகள் விலை இப்போது உயர்ந்து வருகிறது.

புரட்டாசி மாதம் காய்கறி தேவை அதிகரித்துள்ள நிலையில் லாரி வரத்து குறைவாக உள்ளதால் விலை அதிகமாகி விட்டது. அதிலும் குறிப்பாக காலையில் ஒரு விலை மாலையில் ஒரு விலை என வித்தியாசம் உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி ஒரு கிலோ விலை விபரம் வருமாறு:-

கத்தரிக்காய் -ரூ.25, தக்காளி -ரூ.12, நவீன்தக்காளி -ரூ.13, வெங்காயம் -ரூ.16
சின்னவெங்காயம் -ரூ.35, உருளைக்கிழங்கு -ரூ.25, கேரட் -ரூ.40
பீன்ஸ் -ரூ.50, பீட்ரூட் -ரூ.14, சவ்சவ் -ரூ.18, முள்ளங்கி -ரூ.17, கோஸ் -ரூ.10

விலை அதிகமானது குறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் முத்துகுமார் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் காணப்படுகிறது.

ஒரு கடைக்கு 4 லாரிகளில் காய்கறிகளை கொண்டு வந்தால் 2 லாரிகளை மட்டும் முதலில் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கிறார்கள். 2 லாரியை வெளியில் நிறுத்தி விடுகிறார்கள். காய்கறிகளை இறக்கி விற்ற பிறகே வெளியில் நிற்கும் லாரியை உள்ளே அனுமதிக்கிறார்கள்.

இதனால் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என விற்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News