செய்திகள்

எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கு புதிய பாடத்திட்டம் - இணைய தளத்தில் வெளியீடு

Published On 2018-10-11 09:56 GMT   |   Update On 2018-10-11 09:56 GMT
பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழிகாட்டுதலின்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன் பருவ கல்விக்கான பாடத் திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. #MinisterSengottaiyan
சென்னை:

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன் பருவ கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் பள்ளி முன் பருவ கல்விக்கான திட்டத்தினை வடிவமைத்தது.



பிரிகேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழிகாட்டுதலின் படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன் பருவ கல்விக்கான பாடத் திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. இப்பாடத் திட்டம் www.tnscert.org என இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இப்பாடத் திட்டத்தினை பார்வையிட்டு தங்களது கருத்துக்களை வருகின்ற 30-ந்தேதிக்குள் கடிதம் வழியாகவோ அல்லது awpb2018@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ தெரிவிக்கும்படி இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். #MinisterSengottaiyan

Tags:    

Similar News