செய்திகள்

கீழடி நான்காம் கட்ட அகழாய்வில் தங்கம் உள்பட 7000 பொருட்கள் கண்டுபிடிப்பு - தொல்லியல் துறை அறிக்கை

Published On 2018-10-11 08:54 GMT   |   Update On 2018-10-11 08:54 GMT
கீழடியில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சுமார் 7000 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. #KeezhadiExcavation
மதுரை:

கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக வழக்கறிஞர் கனிமொழி மதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும், தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவர்  தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக தொல்லியல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.



அதில், கீழடியில் இதுவரை 4 கட்டமாக அகழாய்வு பணி நடைபெற்றதாகவும், 5-வது கட்ட பணிகளுக்கு அனுமதி கேட்டிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழ் எழுத்துக்கள் பொறித்த பானை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தந்தத்திலான பழமையான சதுரங்க பொருட்கள் 6000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 4-ம் கட்ட அகழாய்வு பணியில் 6 தங்க ஆபரணங்கள் உட்பட 7 ஆயிரம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆபரணங்களின் மதிப்பு மற்றும் வயது குறித்து ஆய்வு செய்ய பீட்டா ஆய்வு மையத்துக்கு அனுப்ப உள்ளோம்.

மேலும் கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்கு அனுமதி கேட்டுள்ளோம். கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை காட்சிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” என தொல்லியல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  #KeezhadiExcavation

Tags:    

Similar News