செய்திகள்

சசிகலா அதிமுகவில் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-10-11 08:04 GMT   |   Update On 2018-10-11 08:04 GMT
சசிகலா அ.தி.மு.க.வில் இல்லை. அவர் அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPanneerselvam #ADMK
சென்னை:

அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

1.3.2018 முதல் 31.5.2018 ஆகிய காலக்கட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டன.

அதில் 43 லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் 60 லட்சம் உறுப்பினர் சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.



முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது, “கடந்த 5 ஆண்டில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

தற்போது குறுகிய காலத்தில் 1 கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்னும் 6 மாதத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றார்.

அப்போது நிருபர்கள், கட்சியில் சசிகலா சேர்க்கப்பட்டு உள்ளாரா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “கட்சியில் சசிகலா புதிதாக சேர்க்கப்படவில்லை. அவர் அ.தி.மு.க.வில் இல்லை. அவர் அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது.

தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டு உள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி கூறும்போது, தினகரனுடன் சொற்பமானவர்களே சென்று உள்ளனர். கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். #OPanneerselvam #ADMK

Tags:    

Similar News