செய்திகள்

ஜெய்ப்பூரில் இருந்து மூட்டையில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி பறிமுதல்

Published On 2018-10-09 10:45 GMT   |   Update On 2018-10-09 10:45 GMT
சுகாதாரமின்றி, முறையாக பதப்படுத்தப்படாத ஜெய்ப்பூரில் இருந்து மூட்டையில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியை சைதாப்பேட்டையில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:

ஜெய்ப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இன்று காலை ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. 6-வது பிளாட்பாரத்திற்கு வந்ததும் ரெயிலில் இருந்து மூட்டை மூட்டையாக ஆட்டுக்கறி பார்சல்கள் இறக்கி வைக்கப்பட்டன.

சுகாதாரமின்றி, முறையாக பதப்படுத்தப்படாமல் இந்த ஆட்டுக்கறி கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் ரெயில் நிலையத்துக்கு சென்று ஆட்டுக்கறி பார்சல்களை பிரித்து சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது தரமற்ற முறையில் ஆட்டுக்கறி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் 2 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

பார்சல் மூலம் புக்கிங் செய்யப்பட்டு இவை கொண்டு வரப்பட்டவை என்பதால் இதை பெற்றுச் செல்ல உள்ள உரிமையாளரை தொடர்பு கொண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சைதாப்பேட்டை பகுதியில் வீட்டில் வைத்து தரமற்ற மாட்டிறைச்சி வெட்டப்பட்டு பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து சைதாப்பேட்டை நெருப்புமேடு பகுதியில் இளங்காளி என்பவரது வீட்டில் இன்று காலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சதா சிவம், முத்துகிருஷ்ணன், மணிமாறன், ஜெபராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய அனுமதி இல்லாமல் மாடு மற்றும் கன்று வெட்டப்பட்டு வருவது தெரியவந்தது.

அங்கிருந்த தரமற்ற சுமார் 500 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பதப்படுத்த பயன்படும் ஐஸ் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
Tags:    

Similar News