செய்திகள்

சபரிமலை விவகாரம் - சிதம்பரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

Published On 2018-10-09 09:42 GMT   |   Update On 2018-10-09 09:42 GMT
சபரிமலையில் பாரம்பரியமிக்க புனித தன்மை காக்க வேண்டி சிதம்பரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
சிதம்பரம்:

சபரிமலையில் பாரம்பரியமிக்க புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும், பெண்கள் தரிசனம் செய்ய பழைய நடைமுறை நீடிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சேவா சங்க தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இதில் சபரிமலையில் பழைய நடைமுறை தொடர வேண்டி ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வேண்டினர். ஐயப்ப பாடல்கள் பாடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேப்போல் மந்தார குப்பத்தில் உள்ள புவனேஷ்வரி அம்மன் கோவிலில் அகில இந்திய பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனைக்கு மந்தார குப்பம் கிளை தலைவர் குருசாமி நாகராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சபரிமலையின் புனிதம், தொன்மை மற்றும் விரதமுறைகள் குறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் பேசினர். இதில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News