செய்திகள்

மெரினாவில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து 8 செல்போன்கள் கொள்ளை

Published On 2018-10-08 14:58 IST   |   Update On 2018-10-08 14:58:00 IST
மெரினா கடற்கரையில் மோட்டார்சைக்கிள் பெட்டியை உடைத்து 8 செல்போன்கள் கொள்ளையடித்து சம்பவம் குறித்து கால்பந்து விளையாடியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். #merinabeach
சென்னை:

மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் வந்திருந்தனர்.

சவுகார்பேட்டையை சேர்ந்த ஹாஸ்முக் என்பவர் தனது நண்பர்கள் 7 பேருடன் மெரினாவுக்கு சென்று கால்பந்து விளையாடினார். அப்போது அனைவரும் தங்களது செல்போன்களை ஹாஸ்முக்கின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துவிட்டு சென்றனர்.

விளையாடி முடித்து விட்டு வந்து பார்த்த போது பெட்டி உடைக்கப்பட்டிருந்தது அதில் இருந்த 8 செல்போன்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி மெரினா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மெரினா கடற்கரையில் ஹாஸ்முக்கும் அவரது நன்பர்களும் விளையாட சென்றதை நோட்டமிட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தப்பி ஓடிய மர்ம வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #merinabeach
Tags:    

Similar News