செய்திகள்

அனைத்து விடுதிகளிலும் சமையலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்- பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2018-10-02 14:38 GMT   |   Update On 2018-10-02 14:38 GMT
தமிழகத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கல்வி விடுதி பணியாளர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் வடமலை வரவேற்று பேசினார். சங்க ஆலோசகர் யாக்கோப்துரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் அறிவழகன், மாநில அமைப்பு செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் சஞ்சய் காந்தி, பொருளாளர் பிரகதி, மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலுள்ள அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , ஒரு விடுதிக்கு குறைந்த பட்சம் 2 சமையலர்கள் நியமிக்க வேண்டும் , புதிய பென்சன் முறையை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் , துப்புரவு பணியாளர் அனைவருக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கல்வி தகுதி உள்ள சமையலர், காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணி வழங்கிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் கோபால் சிறப்புரையாற்றினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் நன்றி கூறினார். #tamilnews
Tags:    

Similar News