செய்திகள்

சுல்தான்பேட்டையில் ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்- போலீசார் விசாரணை

Published On 2018-10-01 17:51 IST   |   Update On 2018-10-01 17:51:00 IST
ஓட்டலில் உணவு இல்லாததால் உரிமையாளரை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமதுஉசேன் (வயது46). இவர் தனது சகோதரர்களான இதயதுல்லா, பரகதுல்லா ஆகியோருடன் சேர்ந்து வில்லியனூர்- சுல்தான் பேட்டை மெயின்ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர்களது ஓட்டலுக்கு கணுவாபேட்டை வினாயகர் கோவில் தெருவை சேர்ந்த வேலு (வயது30) என்பவர் சாப்பிட வந்தார். 

ஆனால் உணவு பண்டங்கள் தீர்ந்து விட்டதாக முகமது உசேன் அவரது சகோதரர்கள் தெரிவித்தனர். ஆனால் ஓட்டலில் பலர் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது தனக்கு மட்டும் உணவு இல்லையா என்று வேலு கேட்டு தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முகமது உசேன், இதயதுல்லா, பரகதுல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து வேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து சென்ற வேலு தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு மீண்டும் ஓட்டலுக்கு வந்தார். அப்போது பழிக்கு பழியாக ஓட்டலில் இருந்த இதுயதுல்லாவை தாக்கிய வேலு மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.

இது குறித்து முகமதுஉசேன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைய்யன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News