செய்திகள்

ரபேல் போர் விமான ஊழல் குற்றச்சாட்டு: மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-30 14:56 GMT   |   Update On 2018-09-30 14:56 GMT
ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் குமரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration

குழித்துறை:

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரியும் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் களியக்காவிளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

களியக்காவிளை சந்திப்பில் ஏராளமான காங் கிரஸ் கட்சியினர் குவிந்தனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், வசந்தகுமார், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

போராட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் இளைஞர் காங்கிரஸ்மாநில தலைவர் ஹசன் ஆரூண், இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஜெபி, இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடக பிரிவு செயலாளரும், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவருமான டாக்டர் அனிதா, இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திவாகர், கிழக்கு மாவட்ட தலைவர் தேவ், லாரன்ஸ், கிறிஸ்டல் ராஜ், ரமணி, பாடகர் முருகானந்தம் உள்பட கலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக ஊரம்பில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீனிவாசுக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடக பிரிவு செயலாளரும், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவருமான டாக்டர் அனிதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீனி வாசுக்கு ஆளுயர மாலை அணிவித்து மலர் கிரீடம் கொடுத்து டாக்டர் அனிதா வரவேற்றார். மேலும் சிலம்பாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #congressdemonstration

Tags:    

Similar News