செய்திகள்

வாழப்பாடியில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது

Published On 2018-09-29 11:15 GMT   |   Update On 2018-09-29 11:15 GMT
வாழப்பாடியில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

வாழப்பாடி:

வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி ஆலோசனையின் பேரில், வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடந்த இரு தினங்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அத்தனூர்பட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கார் டியூப் ஒன்றில் 30 லிட்டர் கள்ளச்சாரயத்தை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை பட்டி வளவு கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் (23) மற்றும் அவரது நண்பரான சடையன் (23) ஆகிய இரு வரையும் வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரு வரும், ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பேளூர் பிரிவு சாலை அருகே வாழப்பாடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட ஏறக்குறைய 18 லிட்டர் கள்ளச்சாரயத்தை வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (39). என்பவர் கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளச்சாரயக் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனங்கள் இரண்டையும் வாழப்பாடி போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட 48 லிட்டர் கள்ளச்சாராயமும் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

Tags:    

Similar News