செய்திகள்

தேனி அருகே பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து

Published On 2018-09-29 16:43 IST   |   Update On 2018-09-29 16:43:00 IST
தேனி அருகே பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

உத்தமபாளையம்:

தேனி அருகே சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பிரிவில் ராமச்சந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றுள்ளார்.

நள்ளிரவு சமயத்தில் கடையில் இருந்த புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அங்காடியில் வேகமாக பரவிய தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News