செய்திகள்

ஆத்தூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2018-09-27 12:01 GMT   |   Update On 2018-09-27 12:01 GMT
ஆத்தூர் பகுதிகளில் இரவு பகல் பாராமல் மின்வெட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட ஆத்தூர், சித்தையங்கோட்டை, செம்பட்டி, போடிக்காமன் வாடி, சீவல்சரகு, ஆதிலட்சுமிபுரம், அழகர் நாயக்கன்பட்டி, சித்தரேவு, பாளையங்கோட்டை, கூலம்பட்டி, சேடப்பட்டி, மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் மின்வெட்டு உள்ளது.

இதன்காரணமாக பொதுமக்களும், வியாபாரிகள் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனை, சித்தையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள், அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போர் ஆகியோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், செம்பட்டியில் தான் துணை மின்நிலையம் உள்ளது. இப்படி மின்சாரம் தடைபடுகிறது என்று பகலில் போன் செய்தாலும் அங்கு பணியில் இருப்பவர்கள் போனை எடுப்பதில்லை. அப்படி எடுத்தாலும் வரும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.

கடந்த வாரம் எல்லாம் பள்ளி மாணவ, மாணவிகள் பரீட்சைக்கு படிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். பச்சிளங்குழந்தைகளை வைத்திருப்போர் அவதிப்படுகின்றனர்.

எனவே மாவட்ட மின்சார வாரியம் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News